கன்னியாகுமரியில்..
பெண் ஒருவர் தன்னை இரண்டு பேர் காதலித்து கொடுத்த டார்ச்சர் காரணமாக தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு இலங்கன்விளையை சேர்ந்தவர் சத்யராஜ்(56).
எலக்ட்ரீசியனான இவருக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவரது இரண்டாவது மகள் திவ்யா (20). பட்டப்படிப்பு முடித்துவிட்டு மேற்படிப்பு செல்லவிருந்தார். இந்நிலையில், மருதங்கோடு இலுப்பப்பவிளையை சேர்ந்த ரஞ்சித் (20) என்பவருடன் திவ்யா பழகி வந்ததாக கூறப்படுகிறது.
ரஞ்சித் 12ம் வகுப்பு படித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்துள்ளார். திவ்யா, இணையம் என்ற இடத்தில் தனது உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஷெர்லின் புரூஸ்(19) என்பவரை காதலிக்க தொடங்கியதாக கூறப்படுகிறது.
ஷெர்லின் புரூஸ் டிப்ளமோ மெக்கானிக் படித்துள்ளார். இதனை அறிந்து கொண்ட ரஞ்சித் திவ்யாவிற்கு தொந்தரவு கொடுக்கப்பட்டதுடன், அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தினையும் சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த திவ்யா தனது பெற்றோரிடமும் கூறி வருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், திவ்யா கடந்த சில நாட்களுக்கு முன்பு மருதங்கோட்டில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனை அறிந்த ஷெர்லின் புரூஸ் திவ்யாவிடம், ரஞ்சித்தை பார்க்க சென்றாயா என்று கேள்வி எழுப்பியதுடன் திட்டவும் செய்துள்ளார். இதனால் மனவேதனையடைந்த திவ்யா தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து தகலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, காதலன் ஷெர்லின் புரூஸை கைது செய்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் திவ்யாவிற்கு டார்ச்சர் கொடுத்த ரஞ்சித்தையும் பொலிசார் தேடி வருகின்றனர்.
இலங்கை முழுவதும் பேசப்பட்ட மிகவும் திறமையான நடனம், இவரின் உண்மையான நிலை இதுவே உறவுகளே.