கல்லூரி மாணவியின் தற்கொலைக்கு காரணம் பேராசிரியர்கள் : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

1217

வேலூரில்..

நர்சிங் வேலூர் மாவட்டம் குடியாத்தம், காமாட்சி அம்மன் பேட்டை பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவரது மகள் கார்த்திகாதேவி (22). இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார்.



இதனிடையே நேற்று முன்தினம் கல்லூரியில் இருந்து இரவு தனது சொந்த ஊரான குடியாத்தம் வந்துள்ளார். பின்னர் அதிகாலை கார்த்திகாதேவி வீட்டில் தனது அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை கண்ட அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் நகர போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்யுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் விசாரணையில், ஆந்திராவில் படித்து வந்த கார்திகாதேவிக்கு கல்லூரி எச்ஓடி மற்றும் பேராசிரியர்கள் தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்தது தெரிய வந்தது. இதனால், மாணவி சில நாட்களுக்கு முன்பு பெற்றோருக்கு போன் செய்துவிட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில்தான், மாணவி கடும் மன உளைச்சலில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. தமிழகத்தில் இருந்து படிப்பிற்காக வெளி மாநிலங்களுக்கு செல்லும் மாணவிகள் இதுபோன்ற தொந்தரவுகளை சந்தித்து வருவதாக குற்றசாட்டுகள் இருந்து வருகின்றன.

ஆகையால், தமிழக அரசு இதில் தனி கவனம் செலுத்தி வெளி மாநிலங்களில் தங்கி படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

மேலும், மாணவிக்கு தொல்லை கொடுத்து வந்த ஆந்திர கல்லூரி எச்ஓடி, பேராசிரியர்கள் மீது சித்தூருக்கு சென்று புகார் கொடுக்க மாணவியின் பெற்றோர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியள்ளது.