ராட்சத அலையில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மாயம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

836

சென்னையில்..

சென்னை, திருவொற்றியூர் பகுதியில், ராட்சத அலையில் சிக்கி, ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மாயமாகியுள்ள நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை, கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த கபீர் (24), அப்பான் (17), சபீர் (19). அமீர் (18) உள்ளிட்ட எட்டு பேர், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள், விடுமுறையை கழிக்க, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திருவொற்றியூர் கே.வி.கே குப்பம் கடற்கரைக்கு வந்தனர்.

அங்கு, எட்டு பேரும், கடலில் இறங்கி குளித்தனர். அப்போது, ராட்சத அலையில், கபீர் , அப்பான் , சபீர், அமீர் ஆகியோர் சிக்கினர். இதை பார்த்த மற்றவர்கள் கத்தி கூச்சலிட்டனர்.

ஆனால், அவர்கள் நான்கு பேரும் கடலில் மூழ்கினர். உடனே திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு அவர்களும், கடலோர காவல் படையினர் ஆகியோர் மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விடுமுறை நாளில் கடலில் குளிக்க வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் நீரில் மூழ்கி மாயமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.