வவுனியாவில் கைதான சட்டவிரோத ஆட்கடத்தல் சந்தேக நபரிடம் தீவிர விசாரணை!!

332

Investigationவெளிநாடுகளுக்கு படகுகள் மூலம் 500க்கும் மேற்பட்ட நபர்களை அனுப்பி வைத்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

முல்லைத்தீவை வசிப்பிடமாக கொண்ட 35 வயதான இந்த சந்தேக நபர் இந்த மாத ஆரம்பத்தில் வவுனியாவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் அந்தமான்தீவில் இருந்து திருப்பிய அனுப்பி வைக்கப்பட்டவர்கள் இவரால் அங்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

படகுகள் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், காணாமல் போன மற்றும் பயணத்தின் போது கடலில் ஏற்பட்ட விபத்துக்களில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் முறைப்பாடுகளை செய்துள்ளனரான என ஆராயப்பட்டு வருகிறது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்ட சந்தேக நபரிடம் திணைக்களத்தின் சட்டவிரோத ஆட்கடத்தல் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரும் வவுனியா பொலிஸாரும் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.