யுவதியின் கின்னஸ் சாதனை படைத்த இறக்கை!!

765

இத்­தா­லியில்..

ஆரி­யானா பலும்போ எனும் இத்­தா­லிய யுவதி ஒருவர் 6.22 மீற்றர் நீளமும் 20.4 அடியையும் கொண்ட மிகப் பெரிய இயந்­தி­ர­வியல் இறக்­கையை தயா­ரித்து கின்னஸ் சாதனை படைத்­துள்ளார்.

இத்­தா­லியின் மிலான் நகரில் அண்­மையில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யொன்­றின்­போது ஆரி­யானா பலும்போ இந்த இறக்­கையை பயன்­படுததியுள்ளார். கதா­பாத்­தி­ர­மொன்றின் ஆடை­ அ­ணி­க­ல­னாக பயன்­பத்­தப்­பட்ட மிகப் பெரிய இயந்­தி­ர­வியல் இறக்கை இது என கின்னஸ் சாதனை நூல் வெளி­யீட்­டா­ளர்கள் அங்­கீ­க­ரித்­தள்­ளனர்.

‘த செவன் டெட்லி சின்ஸ்’ எனும் கொமிக் நாவலில் வரும் எலி­ஸபெத் பாத்­தி­ரத்தின் உந்­து­த­லினால் இந்த இறக்­கையை தான் தயா­ரித்­த­தாக ஆரி­யானா தெரி­வித்­துள்ளார். இது 8 கிலோகிராம் எடையுடையதாக இந்த இறக்கை அமைந்திருந்ததாக கூறப்படுகிறது.

நல்ல மனசு இருந்தா போதும் : மனதை நேகிழ வைக்கும் இளைஞனின் காணோளி