வடக்கு அசாமில்..
வடக்கு அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் இந்த கொடூர கொலை நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் துனிராம் மாத்ரி (40) என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். சுமார் 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காவல் நிலையத்தை அடைந்த அவர் தனது நண்பரின் துண்டிக்கப்பட்ட தலையுடன் சரணடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பாய்லா ஹேமாரம் (55) என்பவரே உயிரிழந்துள்ளார்.
அசாமை உலுக்கிய சம்பவம் கடந்த திங்கட்கிழமை நடந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பாய்லா ஹேமாராம் ஞாயிற்றுக்கிழமை துனிராம் மாத்ரியிடம் ரூ.500 கடன் கேட்டுள்ளார். ஆனால் துனிராம் பணம் கொடுக்கவில்லை.
திங்கட்கிழமை கால்பந்து போட்டியில் பரிசாக வென்ற ஆட்டை அறுப்பதற்காக, தன்னுடன் இறைச்சிக் கூடத்திற்கு வரும்படி துனிராம் ஹேமராமை கேட்டுள்ளார். ஆனால் ரூ.500 கொடுக்காத துனிராமின் கோரிக்கையை ஹேமாரம் நிராகரித்தார். இதனால் ஆத்திரமடைந்த துனிராம், ஹேமராமை தாக்கி கொன்றார்.
துண்டிக்கப்பட்ட தலையுடன் வீட்டிற்கு வந்த துனிராம், அவரது மூத்த சகோதரரால் வீட்டை விட்டு துரத்தப்பட்டார். ஹேமராமை கொல்ல பயன்படுத்திய கூரிய கத்தியையும் போலீசில் ஒப்படைத்தார். தொடர்ந்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நல்ல மனசு இருந்தா போதும் : மனதை நேகிழ வைக்கும் இளைஞனின் காணோளி