சேலத்தில்..
சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு தெற்கு வீதி மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் என்கிற சதீஷ் (வயது 42).
இவர் தெற்குகாடு பகுதியைச் சேர்ந்த வனிதா (வயது 30) என்பவரை கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார், இந்த தம்பதிக்கு 8 வயதில் சர்வேஷ் என்கிற ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் வனிதா பள்ளிக்கு சென்று விட்டு நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார், அப்போது வீட்டினுள் காதல் கணவர் கத்தியால் சரமாரியாக வெட்டப்பட்டு,
இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தவர் அழுது கூச்சலிட்டுள்ளார், இதையறிந்த அக்கம்பக்கத்தினர் கெங்கவல்லி காவல் நிலையத்திற்கு தகவல் தெரித்துள்ளனர்.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்.பி ஸ்ரீஅபிநவ், கைரேகை நிபுணர்கள் மற்றும் லில்லி என்கிற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர்.
பின்னர் இரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அவரது மனைவி வனிதா மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
நல்ல மனசு இருந்தா போதும் : மனதை நேகிழ வைக்கும் இளைஞனின் காணோளி