
ஆந்திர மாநிலத்தில் ஒரே இதயத்துடன் இரண்டு குழந்தைகள் ஒட்டிப் பிறந்துள்ளன.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த கட்டுமானத் தொழிலாளியான மாரவள்ளி ஏர்ரய்யா – நூகாலம்மா என்ற தம்பதியினருக்கு 2 ஆண் குழந்தைகள் ஒட்டிப்பிறந்தன.
குழந்தையின் கழுத்து முதல் மார்பு பகுதி வரை ஒன்றாக ஒட்டி உள்ளன. 2 குழந்தைகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு இதயமே உள்ளது.
இந்த குழந்தைகள் உடனடியாக அங்குள்ள பெரிய மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கு வைத்து குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நூகாலம்மாவுக்கு ஏற்கனவே 2 முறை பிரசவம் நடந்த 2 குழந்தைகளும் இறந்து விட்டனர். இது 3வது பிரசவம் ஆகும். இந்த முறை குழந்தைகள் இப்படி பிறந்துள்ளதால் பெற்றோர் ஆழ்ந்த கவலையில் உள்ளனர்.




