ஆனையிறவு ரயில் நிலைய நிர்மாணப் பணிகளை பார்வையிட்ட கல்வியமைச்சர்!!

619

banthula

பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் அன்பளிப்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஆனையிறவு ரயில் நிலையத்தின் நிர்மாணப் பணிகளை பார்வையிடுவதற்காக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன அங்கு விஜயம் செய்திருந்தார்.

“சிநேகத்தின் நிலையம்” என இந்த ரயில் நிலையத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. அண்மையில் ஆனையிறவுக்கு சென்ற அமைச்சர் ரயில் நிலையத்தின் நிர்மாணப் பணிகளை பார்வையிட்டார்.

வடபகுதிக்கான ரயில் பாதை மக்களின் பங்களிப்புடன் வடக்கின் நண்பர்கள் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நிதி திரட்ப்பட்டு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதேவேளை, இலங்கையின் பாடசாலைகளில் பயிலும் மாணவர்களும் ஆசிரியர்களும் இதற்கு பங்களிப்புகளை வழங்கியுள்ளனர்.