வவுனியாவில் வாழ்வின் எழுச்சி திணைக்களம் திறந்து வைப்பு!!(படங்கள்)

335

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழான வாழ்வின் எழுச்சி திணைக்களம் நேற்றைய தினம் (27) வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திணைக்களத்தை சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார். இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள்..

இன்றைய தினம் 5 மாகாணங்களில் 6 வலயங்களில் வாழ்வின் எழுச்சி திணைக்களங்கள் திறந்து வைக்கப்படுகின்றன. அந்தவகையில் வவுனியாவிலும் இன்று இத் திணைக்களம் திறந்து வைக்கப்படுகிறது.

இவ்வாறான அபிவிருத்தி திட்டங்களை எமது
பகுதிகளில் மேற்கொள்வதற்கு அமைதியான சூழ்நிலையை இங்கு உருவாக்கித் தந்துள்ள ஜனாதிபதி அவர்களுக்கு எமது மக்கள்
சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அரசின் கொள்கையின் அடிப்படையிலான வேலைத்திட்டங்களே மாவட்டங்கள் மற்றும் மாகாண மட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்மூலம் எமது மக்களின் வாழ்வாதார நிலைகளைப் பலப்படுத்துவதே அரசின் நோக்கமாகும்.

இவ்வாறான அபிவிருத்தி முன்னெடுப்புக்களின் போது அரசு இன, மத, மொழி பாரபட்சங்களை கருதாமலேயே அவற்றை மேற்கொண்டு வருகின்றது.

எமது மக்களுக்கு குறைபாடுகள் இருக்கலாம். அவற்றை பேசித் தீர்க்கக்கூடிய அரசியல் நடவடிக்கைகளையே நாம் முன்னெடுத்து
வருகின்றோம்.

எனவே மக்களுக்கான நலன்சார்ந்த இவ்வாறான திட்டங்களை வலுப்படுத்தி முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் இணைந்து ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

நிகழ்வில் வாழ்வின் எழுச்சி திட்ட மேலதிகப் பணிப்பாளர் நாயகம் குமாரசிறி வரவேற்புரை நிகழ்த்தினார்.

வவுனியா மாவட்ட அரச அதிபர் பந்துல ஹரிச்சந்திர திட்டத்தை தெளிவுபடுத்தினார். அமைச்சர் ரிசாட் பதூர்தீன், வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் உரைநிகழ்த்தினார்.

நிகழ்வில் மாவட்ட அரச அதிபர்கள், பிரதேச செயலர்கள், சமுர்த்தி அதிகாரிகள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

1 2 3