தமிழகத்தில்..
தமிழகத்தில் விஷப்பாம்பு கடித்ததை பூரான் கடித்ததாக நினைத்த இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் பஞ்சலிங்கபுரத்தை சேர்ந்தவர் திவ்யபாரதி (28). மென்பொறியாளரான இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் திவ்யபாரதி நேற்று காலை வீட்டு் வாசல் முன்பு இருந்த குழாயை திறந்து தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார். அந்த பகுதியில் குடிநீர் குழாய்கள் சுருண்டு கிடந்தது.
அதன்மேல் மிதித்த போது ஏதோ பூச்சி அவரை கடித்ததாக கூறப்படுகிறது. தண்ணீர் பிடித்து வந்த திவ்யபாரதி தன்னை பூரான் கடித்ததாக சொன்னார். இதையடுத்து கடித்த இடத்தில் மருந்து போட்டு கொண்டார்.
பின்னர் கடிப்பட்ட இடத்தில் இரத்தம் வடிந்ததோடு வலியும் அதிகமாக ஏற்பட்ட நிலையில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது கோதுமை நாகப்பாம்பு கடித்தது தெரியவந்தது. அங்கு சிகிச்சை பலனின்றி திவ்யபாரதி உயிரிழந்தார்.
ஏனெனில் தாமதமாக வந்ததால் அவர் உடல் முழுவதிலும் விஷம் பரவியதால் இறந்திருக்கிறார். இதனிடையில் வீட்டின் அருகே மறைந்திருந்த பாம்பை யுவராஜ் என்ற பாம்பை பிடிப்பதில் வல்லவரான இளைஞர் பிடிக்க முயன்றார்.
அப்போது சீறி பாய்ந்த பாம்பு படமெடுத்து ஆடியது. சிறிது நேர போராட்டத்துக்கு பிறகு அந்த பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டார். இது போன்று எந்தவொரு பூச்சி கடியையும் மெத்தனமாக எடுத்து கொள்ளாமல் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வர வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.