250 கோடியில் பிரமாண்ட திருமணம் : 500 பேரை வெளிநாட்டிற்கு விமானத்தில் அழைத்து சென்ற இந்திய கோடீஸ்வரர்!!

975

தெலங்கானாவில்..

இந்தியாவை சேர்ந்த பெரிய கோடீஸ்வரர் ஒருவரின் மகள் திருமணம் இந்தோனேசியாவில் நடைபெற்ற நிலையில் ரூ 250 கோடி செலவில் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.



தெலங்கானாவைச் சேர்ந்த டிஆர்எஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. பொங்குலெட்டி ஸ்ரீனிவாச ரெட்டி தான் தனது மகளுக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் செய்துள்ளார்.

இவரின் மகள் ஸ்வப்னா ரெட்டியின் திருமணம் கடந்த 12ம் திகதி இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் நடந்தது. இந்தத் திருமணத்தில் கலந்து கொள்ள 500 பேரை சிறப்பு விமானத்தில் ஸ்ரீனிவாச ரெட்டி அழைத்துச் சென்று வியப்பில் ஆழ்த்தினார்.

அதற்கு அடுத்து கம்மம் மாவட்டத்தில் தனது மகளுக்கு வரவேற்பு விழாவை ஸ்ரீனிவாச ரெட்டி நடத்தினார். இதுதான் அனைவரையும் வாயைப் பிளக்க வைத்துள்ளது. டிஆர்எஸ் கட்சியின் முன்னாள் மக்களவை எம்.பி. ஸ்ரீனிவாச ரெட்டி. இவர் மிகப்பெரிய கோடீஸ்வரர் தொழிலதிபர்.

தனது மகளின் திருமணத்துக்கு அழைத்துச்செல்ல முடியாதவர்களை வரவேற்புக்கு அழைத்திருந்தார். திருமண வரவேற்புக்கு மட்டும் 3 லட்சம் பேர் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்காக கம்மம் மாவட்டத்தில் எஸ்ஆர் கார்டன் என்று புதிதாக உருவாக்கப்பட்டது. பாகுபலி திருமணம்போல் நடந்த வரவேற்பு விழாவுக்கு வருவோர் தங்குவதற்காக 30ஏக்கரில் பந்தல் போடப்பட்டது.

மேலும் விழா நடைபெறும் இடத்திற்குச் செல்ல புதிய பாலங்கள் மற்றும் சாலைகள் அமைக்கப்பட்டது. வரவேற்புக்காக விருந்துக்காக மட்டும் 25 ஏக்கரில் உணவு பரிமாறும் டேபிள், சேர் போடப்பட்டிருந்தது ஏறக்குறைய 4 லட்சம் பேருக்கு அன்று சாப்பாடு பரிமாறப்பட்டது.

வவுனியாவில் வீடோன்றின் பதுங்கு குழியிலிருந்து துப்பாக்கி தோட்டாக்களுடன் நால்வர் கைது – பின்னணி?