நீச்சல் குளத்தில் விழுந்து பலியான சிறுமியின் உடல் மக்களின் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம்!!

1186

ரமணி..

வீட்டுவேலைக்கு சென்ற இடத்தில் நீச்சல் தடாகத்தில் விழுந்து உயிரிழந்தார் எனக் கூறப்படும் மலையக சிறுமியின் உடலம், மஸ்கெலியா, மொக்கா தோட்டத்திலுள்ள பொது மயானத்தில் இன்று (22.08.2022) அடக்கம் செய்யப்பட்டது.

மஸ்கெலியா, மொக்கா கீழ்ப்பிரிவு தோட்டத்திலுள்ள 16 வயதான ரமணி என்ற சிறுமி ஆறு மாதங்களுக்கு முன்னர் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.

பிரபல அரசியல்வாதி ஒருவரின் உறவினர் ஒருவரின், கம்பஹாவில் உள்ள வீட்டிலேயே குறித்த சிறுமி பணி புரிந்துள்ளார். சுமார் 6 மாதங்கள் வரை அங்கு வேலைசெய்து வந்த நிலையில் கடந்த 19 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

நீச்சல் தடாகத்தில் விழுந்து மூச்சு திணறல் ஏற்பட்டதாலேயே மரணித்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

இன்று இறுதிக்கிரியைகள் நடைபெற்றன. சிறுமியின் மரணம் தொடர்பில் உண்மை கண்டறியப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.