வவுனியா ஒமந்தையில் வர்த்தக நிலையம் தீயில் எரிந்து நாசம்!!(படங்கள்)

619

வவுனியா ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் அமைந்திருந்த ஓமந்தை ஹாட்வெயார் என்ற வர்த்தக நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீ பரவியது.

ஓமந்தை வேப்பங்குளம் பகுதியில் தற்காலிகமாக வசிக்கும் தினேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான வர்த்தகநிலையத்திலேயே தீ பரவியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ பரவியதால் 40 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக வர்த்தக நிலைய உரிமையாளர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொன்டு வருகின்றனர். தீ பரவியமைக்கு நாசகார வேலையா அல்லது மின் ஒழுக்கு காரணமா என்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

1 2 3 45