“105 குழந்தைகளை பெற்று வளக்கணும்”.. தம்பதியர் எடுத்த முடிவு.. 22 குழந்தைகள் பிறந்ததும் திடீர் திருப்பம்!!

6850

ஜார்ஜியாவில்..

ஜார்ஜியாவின் படுமி என்னும் பகுதியில் வசித்து வருபவர் Kristina Ozturk. இளம்பெண்ணான இவர், Galip Ozturk என்ற தொழிலதிபரை திருமணம் செய்துள்ளார். கிறிஸ்டினா மற்றும் கலீப் தம்பதியருக்கு குழந்தைகள் என்றால் அலாதி பிரியம்.

இதன் காரணமாக, இருவரும் இணைந்து, 105 குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக, 105 குழந்தைகளை வாடகைத் தாய் மூலம் பெற்றெடுத்து அவர்கள் அனைவரையும் வளர்க்க வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளனர்.

முன்னதாக, முதல் கணவர் மூலம் கிறிஸ்டினாவுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது. இதனைத் தொடர்ந்து, வாடகைத் தாய் மூலம், கிறிஸ்டினா – கலீஃப் ஜோடி, மொத்தம் 21 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளது.

இதற்காக, வாடகை தாய்க்கென மட்டுமே, சுமார் 1,68,000 யூரோ தொகையை அவர்கள் செலவிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. 22 குழந்தைகள் தற்போது மொத்தமாக அவர்களுக்கு உள்ள நிலையில், 105 குழந்தைகளை பெற வேண்டும் என்றும் தொடர்ந்து விருப்பப்பட்டும் வந்துள்ளனர்.

அப்படி ஒரு சூழ்நிலையில் தான், எதிர்பாராத சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது.பிரபல தொழிலதிபரான கலீப், பண மோசடி மற்றும் போலியான ஆவணங்களை சமர்ப்பித்தது தொடர்பாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதகவும் கிறிஸ்டினா தெரிவித்துள்ளார்.

105 பிள்ளைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை தங்களின் இலக்காக கொண்ட நிலையில், தற்போது கணவர் கைது செய்யப்பட்டுள்ளதால், கனவு மட்டுமில்லாமல் தங்கள் வாழ்க்கை கூட ஸ்தம்பித்து போனதாக கிறிஸ்டினா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசும் கிறிஸ்டினா, தனது கணவரான கலீப் வருகைக்காக காத்திருப்பதாகவும், அந்த நாள் விரைவில் வரும் என்றும் நம்பிக்கையுடன் இருக்கிறார். அதே போல, இப்படி ஒரு நேரத்தில் தனக்கு ஆதரவாக இருப்பவர்களும் நன்றிகளை அவர் தெரிவித்துள்ளார்.

வீட்டில் இத்தனை குழந்தைகள் இருந்தும், அவரது கணவர் கலீப் இல்லாமல் இருப்பதும், அவரது குரலை கேட்காமல் இருப்பதும் தாங்கிக் கொள்ள முடியாமலும் கிறிஸ்டினா அவதிபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும், வீட்டிலுள்ள அனைத்து குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காகவும் வேலையாட்கள் நிறைய பேரை கிறிஸ்டினா பணிக்கு அமர்த்தி உள்ளார். அதே போல, 22 குழந்தைகளின் செலவு என்பது வாரத்திற்கு சுமார் 4,000 யூரோக்கள் மேல் வரை ஆகும் என்றும் கிறிஸ்டினா குறிப்பிட்டுள்ளார்.

கணவர் தற்போது கைதாகி உள்ள காரணத்தினால், 105 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற இலக்கை சிறிது காலத்திற்கு மாற்றியும் வைத்துள்ளார் கிறிஸ்டினா.

நட்பு என்றால் நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் – நட்பு என்றால் இதான்யா