காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்… மனைவி எடுத்த விபரீத முடிவு!!

636

தென்காசியில்..

தென்காசி மாவட்டம் வென்றிலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வைரவசாமி-முத்துமாரி தம்பதி. இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்த போது கடந்த 3 வருடங்களாக காதலித்து, பின்பு திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர்.



வைரவசாமியை கொன்ற மர்ம கும்பல்: வழக்கம் போல கடந்த 19-ம் தேதி இரவு பணி முடித்து விட்டு வைரவசாமி-முத்துமாரி தம்பதி இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது, சமத்துவபுரம் பகுதியில் இவர்களை காரில் வழிமறித்த கும்பல் ஒன்று, வைரவசாமியை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது.

இதில், பலத்த காயமடைந்த வைரவசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினரிடம் மர்ம கும்பல் ஒன்று கணவரை தாக்கிவிட்டு தன்னிடம் இருந்த நகைகளை பறித்து சென்று விட்டதாக கூறியுள்ளார் முத்துமாரி.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வைரவசாமியின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, விசாரணையை துவக்கினர். முதலில் மனைவி முத்துமாரியிடம் இருந்து தொடங்கியது விசாரணை. அதில் முன்னுக்கு பின் முரணாக முத்துமாரி பதிலளிக்க, கிடுக்குப்பிடி விசாரணை தொடங்கப்பட்டது.

கிடுக்குப்பிடி விசாரணையில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டி விட்டு, நகைகளுக்காக கொலை நடந்ததாக நாடகமாடியது தெரியவந்தது. வைரவசாமிக்கு முன்பாக வீரசிகாமணி என்பவரை முத்துமாரி காதலித்து வந்துள்ளார். இவர்களது பழக்கம் திருமணத்திற்கு பின்பும் தொடர, இதனை தெரிந்து கொண்ட வைரவசாமி கண்டித்துள்ளார்.

வேலைக்கு செல்லும் போதே உடன் அழைத்து சென்று வந்ததால், வீரசிகாமணியுடனான காதலுக்கு இடையூறாக இருந்துள்ளார் வைரவசாமி. இதனால் ஆத்திரமடைந்த முத்துமாரி, வீரசிகாமணியோடு சேர்ந்து வைரவசாமியை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டி, அதனை அரங்கேற்றியும் உள்ளனர்.

இதனையடுத்து கொலைக்கு திட்டம் தீட்டிய முத்துமாரி, வீரசிகாமணி மற்றும் கொலைக்கு உடந்தயாக செயல்பட்ட மேலும் 3 பேரை காவல்துறையினர் கைது செய்து தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கொலை சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு 12 மணி நேரத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்த புளியங்குடி காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

நட்பு என்றால் நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் – நட்பு என்றால் இதான்யா