காதலி சொன்ன ஒரே வார்த்தை.. ஒரு வருடத்தில் 70 கிலோ எடையை குறைத்த இளைஞன்!!

622

இணையத்தில்..

அடிக்கடி இணையதளத்தில் பல விதமான நிஜக் கதைகள் உலா வருவதை நாம் நிறைய கேள்விப்பட்டிருப்போம். அப்படி உலா வரும் கதைகளில், சிலவற்றை நாம் கேள்விப்படும் போது, நமக்கே ஒரு தெம்பு உருவாகி, நம்மை Motivate செய்யும் வகையிலும் அவை அமைந்திருக்கும்.

அந்த வகையில், புவி என்ற இளைஞர் தொடர்பான கதை ஒன்று, தற்போது இணையத்தில் வெளியாகி, பலரையும் சபாஷ் போட வைத்துள்ளது. பொதுவாக, சற்று குண்டாக இருக்கும் நபர் தொடர்பாக அவரை சுற்றி உள்ளவர்கள் சில நேரம் கேலி செய்யும் செய்திகள் அதிகம் நடைபெறுவது உண்டு.

தற்போதைய காலகட்டத்தில், குண்டாக இருப்பது சகஜமான ஒன்றாக இருந்தாலும், அப்படி இருக்கும் ஒரு சிலராவது நிச்சயம் ஏதாவது பிரச்சனைகளை சந்திப்பார்கள். அப்படி குண்டாக இருந்த ஒரு இளைஞர் தான் புவி (Puvi).

கடந்த ஆண்டில், சுமார் 139 கிலோ வரை இந்த புவி, தனக்கு செட் ஆகும் ஒரே ஒரு ஜாக்கெட்டை தான் அணிந்து வந்துள்ளார். ஒரே ஒரு உடையை அடிக்கடி அணிந்து வந்ததன் காரணமாக, நிறைய பேர் அவரை கேலிக்கு உள்ளாக்கினர்.

அது மட்டுமில்லாமல், அவரது எடையை காரணம் காட்டி, காதலியும் அவரை பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. தனது காதலியும், தன்னுடைய உடல் பருமன் காரணமாக தன்னை விட்டுச் சென்றதால், மனமுடைந்து போன புவி, அதிரடி முடிவு ஒன்றையும் எடுத்துள்ளார்.

தனது வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும் என முடிவு செய்த புவி, தன்னை பலரும் கேலி செய்யவும், தனது காதலி விட்டு செல்லவும் காரணமாக இருந்த உடல் எடையை குறைக்கவும் முடிவு செய்துள்ளார்.

இதற்காக கடந்த ஓராண்டாக கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்ட புவி, பலரும் நம்ப முடியாத வகையிலான மாற்றத்தையும் உண்டு பண்ணி, பலரையும் வியக்க வைத்துள்ளார். mஅதன் படி, கடந்த ஒரு ஆண்டில், சுமார் 70 கிலோ எடையை குறைத்த புவி, கடந்த ஆண்டு இருந்ததை விட சரி பாதி எடையில் தற்போது வலம் வருகிறார்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தொடர்ந்து பல வொர்க் அவுட் வீடியோக்களை வெளியிட்டு வரும் புவி, ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி விட்டதாக அவரது நண்பர்கள் கூறுகின்றனர்.

உடல் எடையை காரணம் காட்டி, காதலி விட்டு சென்றதால் அப்படியே ஒதுங்கிக் கொள்ளாமல், மன உறுதியுடன் செயல்பட்டு புவி கொடுத்த Transformation, நெட்டிசன்கள் பலரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது.