“என் சாவுக்கு மாமியாரும் மனைவியின் சகோதரியும்தான் காரணம்”.. கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை!!

683

சென்னையில்..

வடசென்னை கொளத்தூர் பகுதியில் தன் சாவுக்கு தன் மனைவியின் அக்காவும், மாமியாருமே காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை கொளத்தூர் ராஜமங்கலத்தை அடுத்த எம்ஜிஆர் நகர் நீலமேகம் தெரு பகுதியை சேர்ந்தவர் ஓசிலா ஜெனிபர். இவர் டான்போஸ்கோ பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இவருடைய மூத்த மகன் டேனியல் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. டேனியல் தனியாக தனது மனைவி மற்றும் மாமியாருடன் வசித்து வந்துள்ளார். திருமணம் முடிந்த நாள் முதல் கணவனுக்கும் மனைவிக்கும் அடிக்கடி தகராறு வந்துள்ளது.

டேனியலுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் 22 ஆம் தேதி அன்று மதியம் தன் தாய் வேலை செய்யும் பள்ளிக்குச் சென்ற டேனியல், தனக்கு மனசு சரியில்லை என்றும் ஏதோ மனதிற்கு கஷ்டமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து தனது தாயிடம் பசிப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் உடனே ஓசிலா ஜெனிபர் வீட்டுச் சாவியை டேனியலிடம் கொடுத்து வீட்டில் சாப்பாடு இருப்பதாகவும் போய் சாப்பிடுமாறும் கூறியுள்ளார். டேனியலும் சாவியை வாங்கிக் கொண்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் ஓசிலாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பள்ளியில் அரை நாள் விடுப்பு கூறிவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

வீட்டிற்கு வந்த அவர் , கதவை தட்டியுள்ளார். டேனியல் திறக்கவே இல்லை. போன் செய்துள்ளார். அந்த போனையும் டேனியல் எடுக்கவே இல்லை. இதனால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது டேனியல் மின்விசிறியல் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தது தெரியவந்தது.

மகனின் இந்த நிலையை பார்த்து கதறிய ஓசிலா, உடனடியாக ராஜமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது தகவலின் பெயரில் ராஜமங்கலம் காவல்துறையினர் விரைந்து சென்று டேனியலின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் டானியல் எழுதிய கடிதம் ஒன்று சிக்கி உள்ளது. அதில் நான் டேனியல், 30 வயது ஆகிறது நானும் என் மனைவியும் ஒன்றாக இருந்தோம். அவர்களுடைய அக்கா அர்ச்சனா மற்றும் எனது மாமியார் ஈஸ்வரி ஆகிய இருவர் தான் எனது சாவிற்கு காரணம் என எழுதப்பட்டிருந்தது. இது தொடர்பாக டேனியலின் மனைவியின் அக்கா அர்ச்சனா மற்றும் மாமியார் ஈஸ்வரியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.