திருப்பூரில்..
திருப்பூர் அருகே தலைவலியால் அவதிப்பட்டு வந்த தாய் தனது இரண்டு குழந்தைகளை கம்பியால் அடித்து கொலை செய்து விட்டு பூச்சி மருந்து குடித்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மவட்டம் வெள்ளகோவில், அத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் கனகசம்பத் (45). இவர் விவசாயி. இவருடைய மனைவி ரேவதி( 40). இவர்களது மகள் ஹர்சிதா (13), மகன் கலைவேந்தன் (7).
ஹர்சிதா 8ஆம் வகுப்பும் கலைவேந்தன் 2-ம் வகுப்பும் படித்து வந்தனர். இவர்களுக்கு ஊரை ஒட்டியுள்ள தோட்டத்தில் ஒரு வீடும், ஊருக்குள் ஒரு வீடும் உள்ளது. ரேவதிக்கு தலைவலி இருந்து வந்ததால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த நான்கு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
பாஜகவுக்கு மொத்தம் “3 மகன்கள்”.. பணியாவிட்டால் அவர்கள் ஏவப்படுவார்கள்! தேஜஸ்வி சரமாரி அட்டாக் பாஜகவுக்கு மொத்தம் “3 மகன்கள்”.. பணியாவிட்டால் அவர்கள் ஏவப்படுவார்கள்! தேஜஸ்வி சரமாரி அட்டாக்
இதனிடையே தலைவலி அதிகமாகும்போது ரேவதி மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை, கனகசம்பத், கடை வீதிக்கு சென்று விட்டார். அப்போது பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ரேவதி ஊரை ஒட்டியுள்ள தோட்டத்து வீட்டிற்கு சென்றார்.
தனது இரண்டு குழந்தைகளையும் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு, தானும் பூச்சி மருத்து குடித்து மயங்கிய நிலையில் இருந்துள்ளார். வீடு திரும்பிய கனகசம்பத், மனைவி பிள்ளைகளை காணாததால் தோட்டத்து வீட்டிற்கு சென்றிருப்பார்கள் என நினைத்து அங்கு சென்றுள்ளார்.
அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன், மனைவியை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அப்போது ரேவதி இரண்டு குழந்தைகளை கம்பியால் அடித்து கொன்று விட்டு, தானும் விஷம் குடித்து விட்டதாக கணவரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து ரேவதிக்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்தது வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று உயிரிழந்த இரண்டு குழந்தைகளையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வெள்ளகோவில் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயே பெற்ற குழந்தைகளை கொடூரமாக அடித்து கொலை செய்து விட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தலைவலிதான் காரணமா இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.