வவுனியா சுந்தரபுரத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

1108

சுந்தரபுரத்தில்..

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் நேற்று (24.08.2022) இரவு 8.00 மணிளவில் கேரள கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் 200 கிராம் கேரள கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 30 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் எவ்வாறு கேரள கஞ்சா கிடைக்கப்பெற்றது போன்ற மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.