உடல் எடையை குறைத்து காதலனை கரம் பிடிக்க ஆசைபடும் குண்டுப்பெண்!!

619

F1 F2

உலகின் மிக குண்டான பெண், தனது சிகிச்சைக்காக ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று நிதி திரட்டி வருகிறார். அமெரிக்காவை சேர்ந்த சார்ரடி பியர்ஸ் (38) என்ற பெண்மணி, நிணநீர் தேக்க வீக்கம் என்ற நோயால் பாதிக்கப்பட்டு தற்போது 765lbs எடை உள்ளார்.

இவருக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டுமெனில், தனது வீட்டில் இருந்து 1000 மைல்கள் தாண்டி டெக்சஸில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். மேலும் பியர்ஸை ஒரு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல வேண்டும், ஏனெனில் காரில் செல்ல முடியாது.

இதற்கு 5000 டொலர் செலவாகும். இதனால் அவர் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று நிதி திரட்டி வருகிறார். மேலும், பியர்ஸ் இந்த அறுவை சிகிச்சை செய்த பின் தனது 22 வயதான காதலனை திருமணம் செய்ய உள்ளார். அவருடைய திருமணத்தின் போது நடனம் ஆட வேண்டும் என்று மிகவும் ஆர்வத்துடன் உள்ளார்.

சார்ரடி பியர்ஸ்க்கு முன்பே திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இதுகுறித்து அவருடைய மகள் சார்லி கூறுகையில், தனது தாய் நீண்ட நாள் உயிருடன் இருக்க வேண்டுமானல், இந்த சிகிச்சை செய்தால் தான் முடியும் என தெரிவித்துள்ளார்.