இளைஞனின் உயிரை பறித்த கதிர்காமம் பேரூந்து!!

861

விபத்து..

கதிர்காமத்திலிருந்து வந்த அரை சொகுசு தனியார் பேருந்து ஒன்று நேற்று (24) இரவு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் 26 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



மகொன, முங்கென வீதியில் வசிக்கும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற அரை சொகுசு தனியார் பஸ், வடபயகல சந்திக்கு அருகில், கொழும்பில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் கவனக்குறைவாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டு களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.