கவர்ச்சிப் படங்களை வெளியிட்டவர் மீது சுருதிஹாசன் வழக்கு!!

552

Sruthi

தனது கவர்ச்சி படங்களை இணையத்தில் பரவ விட்டவர் மீது வழக்கு தொடரப்போவதாக சுருதிஹாசன் அறிவித்து உள்ளார்.

சுருதிஹாசன், தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிசியாக நடிக்கிறார். கவர்ச்சியிலும் தாராளம் காட்டுகிறார். டி.டே இந்தி படத்தில் விலைமாது கரக்டரில் வந்தார். படுக்கையறை காட்சிகளில் நெருக்கமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

தற்போது ரேஸ்கர்ரம் என்ற தெலுங்கு படத்தில் கவர்ச்சியாக நடனம் ஆடி உள்ளார். இந்த படத்துக்கான போஸ்டர்கள் ஐதராபாத் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் சுருதிஹாசன் மிகவும் கவர்ச்சியாக இருந்தார். இந்த படங்களை எல்லோரும் உற்று பார்த்ததால் போக்குவரத்து நெரில் ஏற்பட்டது. இதனால் பொலிசாரும் சமூக ஆர்வலர்களும் அவற்றை கிழித்து எறிந்தனர்.

இந்த நிலையில் இப்படத்தில் சுருதிஹாசன் கவர்ச்சியாக ஆடிய படங்கள் இணையத்தில் வெளியானது. யாரோ மர்ம நபர் அந்த படங்கள் அனைத்தையும் திருடி இணையத்தில் வெளியிட்டு உள்ளார். இதை பார்த்ததும் சுருதிஹாசன் அதிர்ச்சியானார். இதுகுறித்து அவர் கூறும்போது, எனது படங்களை வெளியிட்டவர் மீது பொலிசில் புகார் செய்வேன். சட்ட நடவடிக்கையும் எடுப்பேன் என்றார்.

ஏவடு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜ் அல்லது அப்படத்தின் ஸ்டில் போட்டோ கிராபர் இருவரில் யாரேனும் ஒருவர்தான் இந்த படங்களை வெளியிட்டு இருக்க வேண்டும் என்று அவர் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது.