எமனாக வந்த நிலச்சரிவு… ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு நடந்த சோகம்!!

415

கேரளாவில்..

இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் மண்ணுக்குள் புரிந்து உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் தொடுபுழா அடுத்துள்ள குடையாத்தூர் எனும் பகுதியில் இன்று அதிகாலை இரண்டரை மணி அளவில் மிகப்பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டது.

நிலச்சரிவில் சோமன் என்பவரது வீடு முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டது. இதில் வீட்டில் உறங்கி இருந்த சோமன் குடும்பத்தைச் சேர்ந்த சோமன் அவரது மனைவி ஷிஜி, அவரது மகள் சீமா, சீமாவின் குழந்தை தேவானந், மற்றும் சோமனின் தாயார் தங்கம்மா என ஐந்து பேரும் மண்ணில் புதைந்தனர்.

நிலச்சரிவில் சிக்கிய இவர்களை மீட்கும் பணியில் அப்பகுதி பொதுமக்களும் மற்றும் தீயணைப்புத் துறையினரும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அப்பகுதியில் மழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.

எனினும் இதை பொருட்படுத்தாமல் தீயணைப்புத் துறை ,காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்களும் மண்ணில் புதைந்தவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர் . இந்த நிலையில் சோமன் அவரது மனைவி சிஜி, தங்கம்மாள் சீமா மற்றும் அவரது குழந்தை தேவானந்த், ஆகியோர் சடலமாக மீட்கக்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட உடல்கள் தொடுபுழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உடற்கூறு பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட உள்ளன.

தற்போதும் அப்பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் இடுக்கி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் வசிப்பவர்கள் மிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் வீபா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.