கூச்சலிட்டும் யாரும் வரவில்லை : நள்ளிரவில் கணவன் மனைவிக்கு நேர்ந்த பயங்கரம்!!

42923


ஆந்திராவில்..ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், பாடூர் பள்ளி, அசோக் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணாராவ் (54). இவரது மனைவி சுனிதா (50). தம்பதிக்கு சாய் சந்த், கோபி சந்த் என 2 மகன்கள் உள்ளனர்.இவர்களுக்கு திருமணமாகி வெவ்வேறு பகுதியில் வசித்து வருகின்றனர். கிருஷ்ணா ராவ் மின்சார வாரிய அலுவலகம் அருகே ஓட்டல் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு ஓட்டலில் வழக்கம் போல் வியாபாரம் முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கணவன், மனைவி இருவரும் தூங்கி கொண்டிருந்தனர்.
அப்போது வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் அறையில் இருந்த பீரோவை உடைத்தனர். கொள்ளையர்கள் பீரோவை உடைப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த தம்பதி கத்தி கூச்சலிட்டனர்.


இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் கணவன், மனைவி இருவரையும் பிடித்து வாயில் துணியை அடைத்து சரமாரியாக தாக்கினார். பின்னர் கத்தியால் 2 பேரின் கழுத்தை அறுத்துள்ளனர். இதில் கணவன் மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்தனர்.

இதையடுத்து,கொள்ளையர்கள் பீரோவில் இருந்த நகை பணத்தை கொள்ளையடித்துவிட்டு சென்றனர். இந்நிலையில், நேற்று காலை ரமணம்மா என்பவர் கிருஷ்ணா ராவ் வீட்டில் பால் ஊற்றுவதற்காக வந்தார்.


அப்போது கணவன், மனைவி இருவரும் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பாடூர் பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 2 பேரின் பிணைத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது 3 பேர் முகத்தை துணியால் கட்டிக்கொண்டு செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.