திருமணம் செய்ய மறுத்த காதலன்… ஆத்திரத்தில் காதலி செய்த செயல்!!

733


மும்பையில்..மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலுள்ள பொவாய் என்ற பகுதியில் ஸொரா ஷா (வயது 32) என்ற இளம்பெண்ணும், ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் ரம்ஜான் ஷேக் என்ற நபரும் காதலித்து வந்துள்ளனர். இதனால் கடந்த ஓராண்டு காலமாக இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக ஸொரா ஷா, ஷேக்கிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறி வந்துள்ளார். ஆனால் கொஞ்சம் நாட்கள் கழியட்டும் என்று கூறியுள்ளார். இப்படி பல மாதங்கள் செல்ல ஸொரா ஷா கேட்கும்போதெல்லாம் கால தாமதம் செய்து வந்துள்ளார் ஷேக்.
இதனால் பொறுமை இழந்த ஸொரா ஷா, தனது காதலன் மீது மோசடி புகார் கொடுக்கவுள்ளதாக மிரட்டி வந்துள்ளார். இதனால் இருவருக்குள்ளும் கடும் வாக்குவாதம் சண்டை ஏற்பட இதில் ஆத்திரமடைந்த ஸொரா ஷா, தனது காதலன் கழுத்தை தனது துப்பட்டாவால் இறுக்க நெரித்துள்ளார்.


இதில் மூச்சு திணறி ஷேக், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் அதிர்ச்சியடைந்த ஸொரா ஷா கதறி அழுதுள்ளார். பின்னர் அந்த பகுதியிலுள்ள காவல்நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். பின்னர் தகவலறிந்து வந்த காவல்துறையினர், ஷேக்கின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

காவல்நிலையத்தில் சரணடைந்த காதலி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். தன்னை திருமணம் செய்துகொள்ள காதலன் தாமதாக்கியதால் ஆத்திரமடைந்த காதலி அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.