வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலயத்தில் ஸ்டெனி டஸ்னா கலைப் பிரிவில் 3A சித்திகளைப் பெற்று சாதனை!!

852


ஸ்டெனி டஸ்னா..வெளியான உயர் தரப்பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலய மாணவி ஸ்டெனி டஸ்னா 3A சித்திகளை பெற்று கலைத்துறையில் மாவட்ட ரீதியில் 8வது இடத்தினை பெற்றுள்ளார்.மேலும் கலைத்துறையில் நந்தகுமார் விதுர்சன் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 21வது இடத்தினையும் விஜயகுமார் அனுஜன் 2ஏ சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 68வது இடத்தினையும் தவரசா நிதுர்சிகா 2ஏ பி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 89வது இடத்தினையும்,
வணிகத்துறையில் சதீஸ்குமார் நிலொக்சன் 3பி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 39வது இடத்தினையும் விஞ்ஞானத்துறையில் நிம்னாஸ் முகமட் இன்பாஸ் 2பி சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 38வது இடத்தினையும் உயிர்முறைகள் தொழிநுட்பம் பி.டெக் பாடத்தில் சரவணகுமார் டனோஸ்ரிகா பி 2சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 7வது இடத்தினையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.


செட்டிக்குளம் இழுப்பைக்குளம் எனும் கிராமத்தில் வசித்து வரும் ஸ்டேனி என்பவரது மகளாகிய டஸ்னா அக் கிராமத்திலிருந்து நகரிலுள்ள செட்டிக்குளம் பாடசாலைக்கு சென்று கலைப்பிரிவில் மூன்று பாடங்களிலும் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 08 வது இடத்தினை பெற்றுள்ளதுடன் அவரது கிராமத்திற்கும் பெருமையினை தேடித்தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.