வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவி லுவின்சிகா 3A சித்திகளுடன் மாவட்ட ரீதியில் முதலிடம்!!

1085


புதுக்குளம் மகா வித்தியாலயம்..வெளியான உயர் தரப்பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் 6 பாடங்களில் அனைத்து மாணவர்களும் 100 வீதம் சித்தி பெற்றுள்ளனர்.இந்துநாகரிகம், தொடர்பாடலும் ஊடகக்கற்கையும், சித்திரக்கலை, கர்நாடக சங்கீதம், நாடகமும் அரங்கியலும், நாட்டியம் ஆகிய பாடங்களில் 100 விகீதம் சித்தியும்,
தமிழ் 98 விகீத சித்தியும் ஐரோப்பிய வரலாறு, புவியியல் 94 வீதம் சித்தியும் கணக்கீடு 90 விகித சித்தியும் , வணிகக்கல்வி 86 விகித சித்தியும் விவசாய விஞ்ஞானம் 83 விகித சித்தியும், பொருளியல் 81 விகித சித்தியும், உயிரியல் 71 விகித சித்தியும் கிறிஸ்தவ நாகரிகம் 67 விகித சித்தியும் இராசயனவியல் 55 விகித சித்தியும்,


இணைந்த கணிதம் 33 விகித சித்தியும் அரசியல் விஞ்ஞானம் மற்றும் இணைந்த கணிதம் 33 விகித சித்தியும், பௌதீகவியல் 25 விகித சித்தியையும் பெற்றுள்ளனர்.

இப் பாடசாலையில் வணிகத்துறையில் மூன்று பாடங்களிலும் 3A சித்திகளை பெற்று லுவின்சிகா மாவட்ட ரீதியில் முதலாவது இடத்தினை பெற்றமை குறிப்பிடத்தக்கது.