தொடர்ச்சியாக 10 வீரர்களும் ஓட்டங்கள் எதனையும் பெறாது ஆட்டமிழந்து புதிய சாதனை!!

243

C1 C2

இங்கிலாந்து உள்ளூர் கிரிக்கெட் அணியில் 10 துடுப்பாட்டக்காரர்களும் ’டக் அவுட்’ ஆகி புதிய சாதனை படைத்துள்ளனர்.

இங்கிலாந்தில் நேற்று ஹஸ்லிங்டன் அணியும், டென் விர்ரல் அணியும் மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஹஸ்லிங்டன் அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 108 ஓட்டங்களை எடுத்தது.

109 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது டென் விர்ரல் அணி. ஆனால் அவர்கள் வாழ்நாளில் இப்படி ஒரு போட்டியை பார்த்தது கிடையாது என்பதை அப்போது அவர்கள் உணரவில்லை. எதிரணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வந்தவர்கள் எல்லாம் வரிசையாக நடையை கட்ட ஆரம்பித்தனர்.

அவர்கள் மட்டையில் பட்டு ஒரு ஓட்டங்கள் கூட எடுக்கவில்லை. காலில் பட்டு கிடைத்த 2 ஓட்டங்கள் மட்டுமே அந்த அணிக்கு சொந்தமானது. பதினோராவது துடுப்பாட்டக்காரராக களமிறங்கிய ஹோப்சன் மட்டுமே மானத்தை காக்க ஒரு ஓட்டத்தை அடித்தார்.

ஆக மொத்தமாக மூன்றே ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படு பரிதாபமாக தோற்று சோதனையிலும் சாதனை படைத்தது.

இதைவிட மோசமானதாக 1913ல் நடந்த ஆட்டத்தில் சோமர்செட் கிளப் அணி, கிளாஸ்டோன்பரியுடனான ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஒரு ஓட்டங்கள் கூட எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.