பாடசாலை செல்ல மறுத்த மகனை மரத்தில் கட்டி சித்திரவதை செய்த தந்தை கைது!!

672

A117 வயதுடைய தனது மூத்த மகனை மரத்தில் கட்டி மர எறும்புகளை தலையில் கொட்டி சித்திரவதை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

மாதம்பே – பம்பல பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவனுக்கு நடக்கும் சித்திரவதைகளை அறிந்த பொலிஸார் விரைந்து சென்று சிறுவனை மீட்டுள்ளனர்.

சிறுவன் பாடசாலை செல்ல மறுத்ததால் அவரை தண்டிக்க இவ்வாறு செய்ததாக கைது செய்யப்பட்ட தந்தை தெரிவிக்கின்றார். சந்தேகநபர் சிலாபம் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.