வவுனியா – மாத்தறை புகையிரதமும், கொழும்பு -பளை கடுகதி புகையிரதமும் நேருக்கு நேர் விபத்து : 70 பேர் காயம், 4 பேரின் நிலை கவலைக்கிடம்!!

664

1

குருநாகல் பொத்துஹெர ரயில் நிலையத்தில் வவுனியாவிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரஜரட்ட ரஜனி புகையிரதம், கொழும்பிலிருந்து வவுனியா ஊடாக பளை நோக்கி பயணித்த கடுகதி ரயில் வண்டியுடன் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 70 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இன்று புதன்கிழமை காலை 8.45 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. சமிக்ஞை கோளாறு காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ் விபத்தில் 70 பேர் காயமடைந்திருப்பதாகவும், அவர்களில் 4 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், குருநாகல் மற்றும் பொல்காவெலை வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.



காயமடைந்தவர்கள் அனைவரும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் காயமடைந்தவர்கள் எப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, வடபகுதிக்கான ரயில் சேவைகள் முற்றாக சீர்குலைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.

12 13 17 16 15 14 18