செல்பி மோகம்… நீர்வீழ்ச்சியில் விழுந்த இளம்பெண்களை காப்பாற்றும் முயற்சியில் முழுக்குடும்பமும் உயிரிழந்த பரிதாபம்!!

348

இந்தியாவில்..

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் 15 பேர் கொண்ட குடும்பம் ஒன்று, கடந்த ஞாயிறன்று, Ramdaha என்னும் நீர்வீழ்ச்சிக்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளார்கள். அப்போது, ஷ்ரதா (14) மற்றும் ஷ்வேதா சிங் (22) ஆகிய இருவரும் செல்பி எடுப்பதற்காக தண்ணீருக்குள் இறங்க, ஷ்ரதா கால் தடுமாறி தண்ணீருக்குள் விழுந்திருக்கிறாள்.

உடனே, அவர்களுடைய சகோதரரான ஹிமான்ஷு சிங் (18), உறவினரான ரிஷப் சிங் (24), அவரது மனைவியான சுலேகா சிங் (22) ஆகியோ தண்ணீரில் விழுந்தவர்களைக் காப்பாற்றுவதற்காக தண்ணீரில் குதித்திருக்கிறார்கள்.

அவர்களைப் பின் தொடர்ந்து சகோதரர்களான அபய் சிங் (22) மற்றும் ரத்னேஷ் சிங் (26) ஆகியோரும் தண்ணீரில் குதிக்க, ஆழம் அதிகமாக இருந்ததால், சிறிது நேரத்துக்குள் அனைவருமே தண்ணீரில் மூழ்கியிருக்கிறார்கள். அருகிலிருந்தவர்கள் உடனடியாக அதிகாரிகளை அழைக்க, மீட்புக்குழுவினர் தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் இறங்கியிருக்கிறார்கள்.

ஆனால், அவர்களால் அன்று மூன்று பேரின் உடல்களை மட்டுமே மீட்க முடிந்துள்ளது. சுலேகா மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். பின்னர், திங்கட்கிழமை மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

சுற்றுலா சென்ற இடத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், செல்பி மோகத்தால் தொடர்ந்து பலர் உயிரிழந்துவரும் விடயம் கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.