வவுனியாவில் கடையுடைத்து திருட முயற்சி தோல்வி : இறுதியில் தண்ணீரை அருந்திவிட்டுச் சென்ற திருடன்!!

1583


பெண்கள் அழகு நிலையத்தில்..வவுனியா வைரவப்புளியங்குளம் புகையிரத நிலைய வீதியிலுள்ள பெண்கள் அழகு நிலையத்தில் (BEAUTY CARE) நேற்று முன்தினம் (02.09.2022) இரவு 11 மணியளவில் திருட்டுச்சம்பமொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த பெண்கள் அழகு நிலையத்தினை வழமை போன்று நேற்று இரவு பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இதன் போது இரவு 11.00 மணியளவில் நபர் ஒருவர் வர்த்தக நிலையத்தின் இடதுபக்கத்திற்கு சென்று முதலில் வெளிப்புறமாக ஒளி ர்ந்து கொண்டிருந்த மின்குமிழை அடித்து நொருக்கியதுடன் வர்த்தக நிலையத்தின் பின்பகுதி கதவினை திறப்பதற்கு முயன்ற போதிலும் கதவினை திறக்க முடியவில்லை.
அதன் பின்னர் அருகேயிருந்த யன்னல் கதவினை திறந்து வர்த்தக நிலையத்தினுள் இருந்த கதிரையினை யன்னல் ஊடாக எடுப்பதற்கு முயன்று அது பயனளிக்கவில்லை என்றதையடுத்து வேறு பொருட்கள் உள்ளதா எனவும் கையினால் தேடியுள்ளதுடன்,


எவையும் கிடைக்காதமையினையடுத்து குறித்த நபர் வர்த்தக நிலையத்தின் யன்னல் ஓரத்தில் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து நீர் அருந்தி விட்டு அப்போத்தலையும் எடுத்து செல்கின்றார் .

எவை தொடர்பிலான காணொளிகள் வர்த்தக நிலையத்தில் பூட்டப்பட்டிருந்த சி.சி.ரி.வி மூலம் பதிவாகியுள்ளமையுடன் வர்த்தக நிலைய உரிமையாளரினால் வவுனியா பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.