வவுனியாவில் மஞ்சள் கொண்டு சென்றவர்களுக்கு நேர்ந்த கதி!!

756


மஞ்சள்..ஏ9 வீதியில் மஞ்சள் கொண்டு சென்ற வாகனம் வவுனியா, ஈரப்பெரியகுளம் பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு 2 மணிநேரம் இடம்பெற்ற விசாரணைகளின் பின் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.வவுனியா, ஏ9 வீதியில் குளிரூட்டப்பட்ட வாகனத்தில் மஞ்சள் கொண்டு செல்லப்படுவதாக ஈரப்பெரியகுளம் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த வாகனத்தை சோதனை செய்த பொலிசார் பெருந்தொகை பச்சை மஞ்சளினை மீட்டதுடன், அதனை கொண்டு சென்ற இருவரையும் தடுத்து வைத்து விசாரித்தனர்.
இதன்போது குறித்த பச்சை மஞ்ள் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படவில்லை என்பது பொலிசாருக்கு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் வாகனத்துடன் மஞ்சள் விடுவிக்கப்பட்டதுடன், தடுத்து வைத்த இருவரையும் விடுவித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.