சென்னை குண்டு வெடிப்பு : கழிறையில் ஒளிந்திருந்தவர் கைது!!(படங்கள்)2ம் இணைப்பு!!

541

C1 C2 C3

சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்பு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த ஒருவரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யட்ட நபரிடமிருந்து பெரிய பை ஒன்றை பொலிஸ் பறிமுதல் செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் ரயில் பெட்டியின் கழிவறையில் ஒளிந்து கொண்டிருந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.

சென்னை மத்திய புகையிரத நிலையத்தில் இன்று காலையில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றது. இதில் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததுடன்,ஒருவர் பலியானார்.

இந்த குண்டுவெடிப்பிற்கு எந்தவொரு தீவிரவாத அமைப்பும் இதுவரை உரிமை கோரவில்லை. குண்டு வெடிப்பு சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.