முத்தரப்பு போட்டியில் சாதிக்குமா இலங்கை அணி ?

436

SRILANKA

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கை அணிக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கின்றது. எனினும் இலங்கை அணி தன்னம்பிக்கையுடன் உள்ளது என அவ்வணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை – இந்தியா – மேற்கிந்தியத்தீவுகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் நாளை மேற்கிந்தியத்தீவுகளில் ஆரம்பமாகின்ற நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அஞ்சலோ மத்தியூஸ்

அண்மையில் நடைபெற்று முடிந்த ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணத்தொடரில் இலங்கை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிவரை முன்னேறியது. இதனால் வீரர்களின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது.

ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் இந்திய மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகள் வலுவானவையாக காணப்படுகின்றன. இந்த அணிகளை வீழ்த்த வேண்டும் என்றால், எல்லா வகையிலும் சிறப்பாக விளையாடுவது அவசியம் என்பதை உணர்ந்துள்ளோம்.

மேலும் எமது அணியின் தொடக்க வீரர் திலகரட்ன டில்ஷான் சம்பியன் கிண்ணத் தொடரில் ஏற்பட்ட உபாதை காரணமாக இத்தொடரில் விளையாடமுடியாது போனமை துரதிர்ஷ்டவசமானது. எனினும் அணியில் இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

முதல் ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணியை எதிர்கொள்கிறோம். இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.