ஶ்ரீதேவி தனக்கும் பல கதைகளை கேட்கிறார். தனது மகள்களுக்கும் பல கதைகளை கேட்கிறார். ஆனால் எந்த படங்களிலும் ஒப்பந்தமாகாமல் வெள்ளித்திரைக்கு ’நோ’ சொல்லிக்கொண்டு, திரையுலக நிகழ்ச்சிகளில் மட்டும் தவறாமல் கலந்துகொள்கிறார்.
சமீபத்தில் நடைபெற்றது IIFA விருது வழங்கும் விழா. பொலிவுட்டில் தொடர் வெற்றிகள் கொடுத்துவரும் இளம் கதாநாயகிகள் பலரும் விதவிதமான உடையில் வந்தி விழாவை சிறப்பாக மாற்றிக்கொண்டிருந்த சமயத்தில் ஸ்ரீதேவி கவர்ச்சியான உடையில் வந்து அனைத்து கேமரா கண்களையும் தன் மீது திருப்பிவிட்டாராம்.
வெள்ளை உடையில் அட்டகாசமான ஃபோஸ் கொடுத்து பல நிமிடங்களுக்கும் கமராவை தன்னருகே நிற்க வைத்த ஸ்ரீதேவி தான் அன்றைய நிகழ்ச்சியின் ஹீரோ என்று புகழ்கிறார்கள் பொலிவுட் பிரபலங்கள்.





