ஆண்கள் பல பெண்களை திருமணம் செய்துகொள்ளலாம் : கென்ய அரசு அதிரடி!!

590

Kenya

ஆண்கள் பல பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்று கென்யா அரசு அறிவித்துள்ளது. ஆபிரிக்க நாடான கென்யாவில், பல பெண்களை திருமணம் செய்து கொள்வதற்கு, அந்நாட்டு அரசே தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

சர்ச்சைக்குரிய இந்த சட்டம் கடந்த மாதம் பாராளுமன்றத்தில் , தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத்திற்கு, பெண் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆண் உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு, ஒருமனதாக ஆதரவு அளித்துள்ளனர். இதையடுத்து, இந்த சட்ட மசோதா, சட்ட வடிவம் பெற்றுள்ளது.

இதுகுறித்து கென்யா அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமண விதிமுறைகளை நன்கு பரிசீலித்த பின், இந்த புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆணும் அவரவர் விருப்பப்படி, ஒன்று அல்லது பல திருமணங்களை செய்துகொள்ளலாம். இதற்கான சட்ட மசோதாவுக்கு, அதிபர், உஹரூ கென்யாதா ஒப்புதல் அளித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தை எதிர்த்து அந்நாட்டு பெண் வழக்கறிஞர்கள் வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளனர்.