ஆசிய வலைப்பந்து கிண்ண தொடர் : வெற்றிவாகை சூடிய இலங்கை அணி!!

405


ஆசிய வலைப்பந்து கிண்ண தொடர்..2022ஆம் ஆண்டுக்கான ஆசிய வலைப்பந்து கிண்ணம் இலங்கை வசமானது. ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி இலங்கை அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது​.சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் வலைப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியை 63க்கு 53 என்ற புள்ளிக்கணக்கில் இலங்கை வெற்றிக்கொண்டது.
ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி வெல்வது இது 6வது முறையாகும என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறவுள்ளது.