வவுனியா வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத நிலையில் புதைக்கப்பட்ட 40 சடலங்கள்!!

675

Body

வவுனியா வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத நிலையில் நாற்பது சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சில மாதங்களாக வவுனியா வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டிருந்த சடலங்களே இவ்வாறு புதைக்கப்பட்டுள்ளன.

சடலங்கள் பற்றி அறிவிக்கப்பட்டும் எவரினாலும் உரிமைக் கோரப்படவில்லை என வவுனியா வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. புதைக்கப்பட்ட சடலங்களில் 33 சடலங்கள் சிசுக்களினது எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய சடலங்கள் பெரியவர்களுடையது எனவும், இதில் 110 வயதான பெண் ஒருவரின் சடலமும் உரிமை கோரப்படாது வைத்தியசாலை சவச்சாலையில் நீண்ட காலம் வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சில சடலங்களை உறவினர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளதாகவும், அரச செலவில் சடலங்கள் புதைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா இராசேந்திரகுளம் இந்து மயானத்தில் கடந்த 29ம் திகதி சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளுக்காக 38 பெண்கள் மற்றும் 15 ஆண்களின் உடல் உறுப்புக்களும் புதைக்கப்பட்டுள்ளன.