
இலங்கையில் இருந்து 46 வயதுடைய அவுஸ்திரேலிய பெண் ஒருவர் படகு மூலம் தமிழகம், அரிச்சல்முனை பகுதியைச் சென்றடைந்துள்ளார்.
உலகின் அனைத்து நாடுகளுக்கும் விஜயம் செய்யும் தமது பயணத்தின் ஒரு கட்டமாக இந்த விஜயம் அமைந்துள்ளது.
சென்ரோ ரொப்சன் ஹெயா என்ற அந்த பெண் இதுவரையில் 12 நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளார். இதில் ஜேர்மனி மற்றும் எகிப்து போன்ற நாடுகளும் உள்ளடங்கும்.
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் சாதனையை பதிவு செய்யும் வகையிலேயே தாம் இந்த முயற்சியை மேற்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் நாளை மண்டபம் பகுதியில் இருந்து மும்பைக்கு படகு மூலம் சவாரி செய்யவுள்ளார்.





