சென்னை வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!!

712

EA

சென்னை ராயப்பேட்டையில் உள்ள (Express avenue) தனியார் வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குண்டு வெடிக்கும் என மர்மநபர் ஒருவர் பொலிஸ் கட்டுப்பாடு அறைக்கு போனில் மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அடுத்து எக்ஸ்பிரஸ் அவென்யூ வளாகத்தில் இருந்து வாடிக்கையாளர்கள், ஊழியர் வெளியேற்றப்பட்டனர்.

வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் குண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனையடுத்து மிரட்டல் உண்மையல்ல புரளி என்று தெரிந்ததும் எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிகவளாகம் சகஜ நிலைக்கு திரும்பியது.