மீனவர்களின் வலையில் சிக்கியது இராட்சத கொம்புத் திருக்கை!!

645

T1 T2

சுமார் 400 கிலோ நிறையுடைய இராட்சத கொம்புத் திருக்கை மீன் ஏறாவூர் சவுக்கடியில் ஆழ்கடல் மீன்பிடியாளர்களின் வலையில் சிக்கியுள்ளது.

நீண்ட இறகுகளையும் இரு கொம்புகளையும் கொண்ட இம்மீனை மீனவர்கள் கரைக்குக் கொண்டு வந்து சேர்க்க சிரமப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

கடற்கரைச் சந்தை விலையின்படி சுமார் எண்பதினாயிரம் ரூபாவுக்கு இந்த ஒரு கொம்புத் திருக்கை மீன் விலை போகலாம் என்று மீனவர்கள் கூறினர்.