
2015ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு பிறகு ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக சங்கக்கார கூறியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் சங்கக்கார இலங்கை அணி T20 உலகக்கிண்ணத்தை வென்ற பிறகு, 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இதற்கிடையே ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ள சங்கக்கார, இது குறித்து கூறுகையில், டெஸ்ட் போட்டியில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன். அதனால் 2015 உலகக்கிண்ணப் போட்டி எனது கடைசி ஒருநாள் போட்டியாகும்.
தேர்வு குழுவினருடன் பேசிய பிறகு இறுதி முடிவை அறிவிப்பேன். இலங்கை அணிக்காக விளையாடுவதை பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.
ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்களில் டெண்டுல்கர், பொண்டிங், ஜெயசூர்ய ஆகியோருக்கு அடுத்தப்படியாக சங்கக்கார 4வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





