இலங்கையில் காலணிகளை கொள்வனவு செய்ய தவணை முறை வசதி!!

890

தவணை முறை வசதி,,

இலங்கையில் காலணிகளின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், எளிமையாக தவணை முறையில் பணத்தை செலுத்தி காலணிகளை கொள்வனவு செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க காலணி தயாரிப்பு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

ஒரு ஜோடி காலணியின் (சப்பாத்து) விலையானது 7 ஆயிரம் ரூபாவுக்கும் மேல் இருப்பதால், அதற்கான விலையை தவணை முறையில் செலுத்த வசதி வழங்கப்பட்டுள்ளது.

2500ஆயிரம் ரூபா பெறுமதியான காலணிக்கு மூன்று தவணைகளில் பணத்தை செலுத்த முடியும் என காலணி தயாரிப்பு நிறுவனங்கள் இணையத்தளங்களில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளன.