புகையிரதத்தில் தவித்த நிறைமாத கர்ப்பிணி.. தேவதை மாதிரி வந்த மருத்துவ மாணவி!!

441

புகையிரதத்தில்..

ரெயிலில் கர்ப்பிணி பெண் ஒருவர் வலியால் துடித்த நிலையில், அதன் பின்னர் நடந்த சம்பவம், தற்போது இணையத்தில் பலரையும் நெகிழ வைத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன், செகந்திராபாத் ரெயில் விசாகப்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த ரயிலில் சுமார் 28 வயதான கர்ப்பிணி பெண் ஒருவர் பயணித்துள்ளார்.

நிறைமாத கர்ப்பிணியாக அந்த பெண் இருந்ததாக கூறப்படும் நிலையில், அம்மாவின் வீட்டிற்கு அவர் ரயிலில் சென்று கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்நிலையில், இரவு நேரம் திடீரென அந்த பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வலியில் அவர் கத்த ஆரம்பித்த நிலையில், அந்த பெட்டி முழுக்க இருந்த நபர்கள் மத்தியில் கடும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அதே கோச்சில் 23 வயது நிரம்பிய ஸ்வாதி ரெட்டி என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவி ஒருவரும் பயணம் செய்து கொண்டிருந்துள்ளார். அவர் அங்கே சென்று விஷயத்தை தெரிந்து கொண்டுள்ளார். தொடர்ந்து, அவருக்கு குழந்தை பிறக்க போகிறது என்பதையும் அந்த மாணவி உணர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஆனால், சிகிச்சை அளிக்க ஸ்வாதி தயாராக இருந்த போதிலும், அவர் சிறிய பெண் போல இருந்ததால் முதலில் அந்த கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. பின்னர் தான் மருத்துவ மாணவி என்பதையும் பிரசவம் பார்க்க தெரியும் என்றும் ஸ்வாதி கூறி உள்ளார்.

இதன் பின்னர், அந்த கர்ப்பிணியின் குடும்பத்தினர் ஓரளவுக்கு சம்மதம் சொன்ன நிலையில், அந்த இடமே பிரசவம் பார்க்கும் இடம் போல மாறி, துணி அனைத்தும் கட்டப்பட்டு பிரசவம் பார்க்க ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிகாலை 3:30 மணியளவில் அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு, சுமார் 5:30 மணியளவில் அந்த பெண்ணுக்கு குழந்தையும் பிறந்துள்ளது. அந்த பெண்ணும், பிறந்த குழந்தையும் நல்ல நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது பற்றி பேசும் மருத்துவ மாணவி ஸ்வாதி, “மருத்துவமனையில் எங்கள் மருத்துவர்களுடன் இணைந்து நான் பிரசவம் பார்க்க துணையாக இருந்துள்ளேன். ஆனால், தனியாக பிரசவம் பார்ப்பது இதுவே முதல் முறை. இதனால், எனக்கு சற்று பதற்றமாக இருந்தது. அதே வேளையில், இதில் எனக்கு நிறைய பயிற்சி இருந்ததால் தைரியத்துடன் இதனை செய்தேன்.

மருத்துவ கருவிகள் எதுவும் இல்லாததால், நேரம் அதிகம் எடுத்துக் கொண்டது. குழந்தை நல்லபடியாக வெளியே வந்த பிறகு தான் நிம்மதி அடைந்தேன்” என ஸ்வாதி கூறி உள்ளார். ரயிலில் கர்ப்பிணி பெண் பிரசவ வலியால் துடித்த நிலையில், தெய்வம் போல வந்து காப்பாற்றிய மருத்துவ மாணவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.