தவறான உடலில் தாங்கள் பிறந்து விட்டோம்.. ஃபேஷன் உலகில் கலக்கும் 10 வயதே ஆன உலகின் இளம் திருநங்கை!!

419

இளம் திருநங்கை..

உலக அளவில் பல மனிதர்கள் பலர், தாங்கள் எதிர் கொள்ளக்கூடிய முக்கிய ஹார்மோன் மாறுபாட்டினால், அவர்கள் மூன்றாம் பாலினத்தவர் என்கிற அடையாளத்தை பெறுகின்றனர்.

சமூகத்தில் இவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்தாலும், தற்போது போராடி தங்களுடைய சுய அடையாளத்தை மீட்க பலரும் முயற்சித்தும் சாதித்தும் வருகின்றனர். இந்த நிலையில் தான் பிரபல 10 வயதேயான இளம் நியூயார்க் ஃபேஷன் மாடல் ஒருவர் தற்போது வைரலாகி வருகிறார்.

10 வயதில் இளம் திருநங்கை மாடலாக நியூயார்க் ஃபேஷன் வீக்கினை சிறப்பித்தவர் நோயெல்லா மெக்மேஹர் (Noella McMaher). இவர் பிரபல டிரான்ஸ் ஆடை நிறுவனத்திற்கான 7 நிகழ்ச்சிகளில் மாடலாக பங்கேற்றவர்.

இவர் 2 வயதிலேயே தான் ஒரு பெண் என்பதை உணர்ந்து தன்னுடைய பெற்றோரிடம் கூறியிருக்கிறார். இவருடைய பெற்றோரும் இவருடைய பயணத்துக்கு மிகவும் ஆதரவாக இருந்திருக்கிறார்கள்.

தொடர்ந்து தம்முடைய செயல்பாடுகள் மூலம் திருநங்கை குழந்தைகள், மற்ற குழந்தையிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல என்பது குறித்த புரிதலை மக்களிடம் ஏற்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் நோயெல்லா மெக்மேஹர்.

மேலும் தவறான உடலில் தாங்கள் பிறந்து விட்டதாகவும், அதை கண்டுபிடித்து தன்னுடைய பாலினத்தை மாற்றுவதாகவும் கூறும் நோயெல்லா மெக்மேஹர் , திருநங்கைகளாக இருப்பது என்பது மோசமானது அல்ல என்று மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

அத்துடன் குழந்தைகளுக்கு, தான் செய்யும் செயல்கள் மூலமும் அவற்றை காட்டுகிறார். அப்போதுதான் வளரும் போது அந்த குழந்தைகள் அதை புரிந்து கொள்வார்கள் என்று நோயெல்லா மெக்மேஹர் விரும்புகிறார்.

இந்த நிலையில்தான் சுமார் 6 மாதங்களுக்கு முன்பாக நியூயார்க் பேஷன் வீக்கின் மிகவும் இளம் திருநங்கையாக வலம்வந்து மிகப்பெரிய வரலாற்றையே, தான் சாதித்தது குறித்து தன்னால் நம்ப முடியும் இல்லை என்றும்,

சர்வதேச அளவில் வரலாறு படைப்பதற்கு அடுத்த மாதமே பாரீசில் நடக்கும் ஃபேஷன் வீக்கில் வரவிருப்பதாகவும், நோயெல்லா மெக்மேஹர் தம்முடைய இன்ஸ்டா பதிவில் தெரிவித்து இருக்கிறார். இவருடைய பதிவு தற்போது வைரலாகி வருகிறது.