வவுனியா ஓமந்தையில் புகையிரதம் மோதி குடும்பஸ்தர் மரணம்!!

1242


குடும்பஸ்தர் மரணம்..வவுனியா, ஓமந்தையில் புகையிரதம் மோதி குடும்பஸ்தர் ஒருவர் மரமடைத்துள்ளார். நேற்று (17.09.2022) இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதம் இரவு 10 மணியளவில் ஓமந்தை, விளக்குவைத்தகுளம் பகுதியில் பயணித்த போது புகையிரத பாதையில் இருந்த குடும்பஸ்தர் ஒருவரை மோதித் தள்ளியது.
குறித்த விபத்தில் சம்பவ இடத்திலேயே குடும்பஸ்தர் மரணமடைந்த நிலையில், சடலம் புகையிரத திணைக்கள உத்தியோகத்தர்களால் மீட்கப்பட்டு, வவுனியா புகையிரத நிலையத்தில் வைத்து பொலிசாரிடம் கையளிக்கப்பட்டது.


பொலிசாரால் சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவத்தில் ஓமந்தை விளக்குவைத்த குளம் பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான எஸ்.நகுலன் என்பவரே மரணமடைந்தவராவார்.