சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் தயாரான கோச்சடையான் வரும் 9ம் திகதி ரிலீசாகும் நிலையில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் லிங்கா என்ற புதிய படத்தில் நடிக்க அவர் முடிவு செய்தார்.
இருவேறு மாறுபட்ட கதாபாத்திரங்களில் ரஜினிகாந்த் கலக்கப்போகும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா ஷெட்டி மற்றும் சோனாக்ஷி சின்ஹா நடிப்பதாக தெரிய வந்துள்ளது.
குறுகிய கால தயாரிப்பாக இரண்டே மாதங்களில் இப்படத்தை முடித்து, வரும் தீபாவளியின் போது திரையிட துரித ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், லிங்கா படத்தின் பூஜையுடன் கூடிய முதல் காட்சி படப்பிடிப்பு மைசூர் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சாமுண்டீஸ்வரி கோயிலில் தொடங்கியது.
லிங்கா படத்தின் பெயர் காரணம் பற்றி தகவல் வெளியிட்ட ரஜினிக்கு நெருங்கிய வட்டாரங்கள், தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியரின் மகனுக்கு சிவபக்தரான ரஜினி லிங்கா என்று பெயரிட்டுள்ளதாகவும், அந்தப் பெயரையே இந்தப் புதிய படத்துக்கு தலைப்பாக சூட்டியுள்ளதாகவும் தெரிவித்தனர்.





