காதல் தோல்வியால் விஷால் பட நடிகை தூக்கு போட்டு தற்கொலை!!

441


தீபா..விஷாலின் துப்பறிவாளன் படத்தில் நடித்த தீபா என்பவர் காதல் தோல்வியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வந்தவர் தீபா என்கிற ஜெஸி பவுலின். 29 வயதான அவர் வாய்தா படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் அவர் தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


முதல்கட்ட விசாரணையில் காதல் தோல்வியால் தீபா இப்படி ஒரு விபரீத முடிவு எடுத்தது தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் தோல்வியால் ஒரு நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவின் மரணம் குறித்து அறிந்த திரையுலகினரும், ரசிகர்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். காதல் தோல்விக்கு இது தீர்வில்லையே தீபா, அவசரப்பட்டுவிட்டீர்களே என்று சிலர் கூறியுள்ளனர்.